ADDED : அக் 13, 2011 12:41 AM
செம்பட்டி : செம்பட்டி அருகே ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் வரதராஜ்.
மனைவி
ராணி, 28. இவர்களுக்கு கவுசிக், 4, மற்றும் ஹேமா (ஆறு மாதம்) என்ற
குழந்தைகள். நேற்று முன்தினம் துர்க்கையம்மன் கோயில் விழா நடந்தது. இதில்
பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினர். அதிகாலையில் ராணி மற்றும்
கைக்குழந்தையை காணவில்லை. தேடியபோது, துர்க்கையம்மன் கோயிலின் பின்புற
கிணற்றில் குழந்தையுடன் குதித்து ராணி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ராணி, குழந்தையின் உடலை, ஆத்தூர் தீயணைப்பு படையினர் மீட்டனர். போலீசார்
விசாரிக்கின்றனர்.


