/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஒகேனக்கல் பூங்கா தேர்வான இடத்தில் கலெக்டர் ஆய்வுஒகேனக்கல் பூங்கா தேர்வான இடத்தில் கலெக்டர் ஆய்வு
ஒகேனக்கல் பூங்கா தேர்வான இடத்தில் கலெக்டர் ஆய்வு
ஒகேனக்கல் பூங்கா தேர்வான இடத்தில் கலெக்டர் ஆய்வு
ஒகேனக்கல் பூங்கா தேர்வான இடத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2011 11:42 PM
தர்மபுரி: ஒகேனக்கல்லில் சுற்றுலா திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 2 லட்சத்து, 75 ஆயிரம் மதிப்பில் பூங்கா அமைக்கும் இடத்தை கலெக்டர் லில்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரு கோடியே, 67 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டையும், கார் நிறுத்தும் இடம், ஆடி பெருக்கு விழாவின் போது, வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ற இட வசதிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு கலெக்டர் லில்லி அறிவுரை வழங்கினார். பின் ஒகேனக்கல் படகு இல்லம், மசாஜ் சென்டர், தொங்கு பாலம், சினிஃபால்ஸ் ஆகிய பகுதிகளை ஆய்வு அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும், ஊட்டமலை பகுதியில் படவு இல்லம் அமைப்பு குறித்த இடத்தையும் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், சுற்றுலா அலுவலர் (பொ) இளங்கோ, பென்னாகரம் தாசில்தார் ரவீந்திரன், பி.டி.ஓ., சுந்தரேசன், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் தினேஷ்குமார், கூத்தப்பாடி பஞ்சாயத்து தலைவர் கவிதா சம்பத் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.


