கோவை, மதுரை, திருச்சியிலும், "மோனோ ரயில்' திட்டம்:தமிழக அரசு ஆய்வு
கோவை, மதுரை, திருச்சியிலும், "மோனோ ரயில்' திட்டம்:தமிழக அரசு ஆய்வு
கோவை, மதுரை, திருச்சியிலும், "மோனோ ரயில்' திட்டம்:தமிழக அரசு ஆய்வு

சென்னை:''கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களிலும், மோனோ ரயில் திட்டத்தை கொண்டுவர உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்'' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில், ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து குறித்த அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க, ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஒன்றை, உருவாக்குவதற்கான வரைவு விதிமுறைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தவும், மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக, 111 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக 300 கி.மீ., வரை விரிவுப்படுத்தப்படும். கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


