நடிகர் மோகன்லால் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறையினர் "ரெய்டு'
நடிகர் மோகன்லால் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறையினர் "ரெய்டு'
நடிகர் மோகன்லால் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறையினர் "ரெய்டு'
ADDED : ஜூலை 27, 2011 12:10 AM
கொச்சி : நடிகர் மோகன்லால் வீட்டிற்கு, நேற்று மதியம் மீண்டும் வருமான வரித் துறையினர் சென்று ரெய்டு நடத்தினர். இரு தினங்களுக்கு முன் சென்றபோது, அங்குள்ள இரு அறைகளைத் திறக்க முடியாமல் போனதால், நேற்று நடிகர் மோகன்லால் வீட்டில் இருக்கும்போது அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான, நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் வீடுகளில், 22ம் தேதி காலை 6.30 மணிக்கு ஒரே நாளில், ஒரே நேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அப்போது கொச்சி தேவரையில் உள்ள மோகன்லாலின் வீட்டில் இரு அறைகள், பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் பூட்டப்பட்டிருந்தன. அவற்றை மோகன்லாலோ அல்லது அவரது மனைவி சுசித்ராவோ, விரல் அடையாளம் வைத்தால் தான் திறக்க முடியும் என்பதால், அதிகாரிகள் அவ்வறைகளில் சோதனை நடத்த முடியாமல் திரும்பி விட்டனர்.
இதுகுறித்து, மோகன்லாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் நேற்று கொச்சிக்கு வந்தார். அவர் வந்து விட்ட விவரம் அறிந்ததும், நேற்று மதியம் 12 மணியளவில் வருமான வரித் துறை அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழு அவரது வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ரெய்டில், இவ்வீட்டில் இருந்து இரு யானைத் தந்தங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று, விசாரித்து வருகின்றனர்.