ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை : கோவில் நிர்வாகம் புகார்
ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை : கோவில் நிர்வாகம் புகார்
ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை : கோவில் நிர்வாகம் புகார்

மதுரை : மதுரை ஆக்கிரமிப்பு படலத்தின் உச்சமாக, மீனாட்சி அம்மன் கோவிலிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.
அதில் கூறியதாவது: கோவிலின் நான்கு கோபுர வாசலில், பூஜைப்பொருள் விற்கும் உரிமம், கோவில் நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. வடக்கு கோபுர வாசல் எதிரே, மாநகராட்சி அனுமதி பெற்ற இரு கடையில்(எண்.235,466), அனுமதியில்லாமல் பூஜை பொருட்கள் விற்கின்றனர். சிகரெட், போதை வஸ்துகள் விற்பதால், கோவிலின் புனிதம் பாதிக்கிறது. கோவில் மூலம் பூஜை பொருள் விற்கும் உரிமம் பெற்றவர்கள், நஷ்டம் அடைகின்றனர். இதை காரணம் காட்டி, பிற கடையின் ஏலம் புறக்கணிக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ல் கொடுத்த புகார் மீது, இதுவரை நடவடிக்கை இல்லை.