/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கடற்கொள்ளையை தடுக்க இந்திய கப்பல்களுக்குஆயுதம் ஏந்திய பாதுகாப்புகடற்கொள்ளையை தடுக்க இந்திய கப்பல்களுக்குஆயுதம் ஏந்திய பாதுகாப்பு
கடற்கொள்ளையை தடுக்க இந்திய கப்பல்களுக்குஆயுதம் ஏந்திய பாதுகாப்பு
கடற்கொள்ளையை தடுக்க இந்திய கப்பல்களுக்குஆயுதம் ஏந்திய பாதுகாப்பு
கடற்கொள்ளையை தடுக்க இந்திய கப்பல்களுக்குஆயுதம் ஏந்திய பாதுகாப்பு
ADDED : அக் 13, 2011 05:38 AM
தூத்துக்குடி: கடற்கொள்ளையர்களை கட்டுபடுத்த இந்திய கப்பல்களுக்கு ஆயுதம்
ஏந்திய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்
தெரிவித்துள்ளார்.வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; இந்திய கப்பல்
போக்குவரத்து கழகத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா மும்பையில் நடந்தது.
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்
பேசும்போது; இந்திய கப்பல்களின் மொத்த டன்னேஜ்களை அதிகரிக்க
துறைமுகத்திற்கு தேவையான அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தி
வருகிறது. கப்பல் துறை அமைச்சகத்தின் முற்போக்கு நடவடிக்கைகளின் மூலம்
கடந்த ஆண்டில் 10 மில்லியன் டன்களாக இருந்த இந்திய கப்பல்களின் மொத்த
டன்கள் தற்போது 10.75 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு
ஆண்டுகளில் 14 ஆயிரத்து 178 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பொது மற்றும்
தனியார் கூட்டமைப்பின் மூலம் இந்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
கடல்சார் வர்த்தகம் சமீப காலமாக மிக அதிகமான சோதனைகளை எதிர்
கொண்டிருக்கிறது.
குறிப்பாக சோமாலிய கடற்கொள்ளையர்களால் செய்யப்பட்டு வரும்
கடற்கொள்ளையைத் தடுக்க மத்திய கப்பல் துறை அமைச்சகம், மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் அனைத்து நாடுகளின் முயற்சியுடன்
நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தனியார் பாதுகாப்பு துறையினருக்கு
இந்திய கப்பல்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமிப்பதற்கு வரைமுறை
அளிக்கப்பட்டிருக்கிறது. கடல் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் எண்ணெய்
கசிவினை தடுப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக உபயோகத்தில் இருக்கும்
கப்பல்களின் போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த மத்திய கப்பல் துறை அமைச்சகம்
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்திய கடற்பரப்பு சுத்தமாகவும்,
மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று அவர் விழாவில் பேசியதாக
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


