Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்தல் நன்னடத்தை விதிகள் அலுவலர்களுக்கு அறிவுரை

தேர்தல் நன்னடத்தை விதிகள் அலுவலர்களுக்கு அறிவுரை

தேர்தல் நன்னடத்தை விதிகள் அலுவலர்களுக்கு அறிவுரை

தேர்தல் நன்னடத்தை விதிகள் அலுவலர்களுக்கு அறிவுரை

ADDED : அக் 08, 2011 12:14 AM


Google News

கோவை : 'தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என்று, கோவையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிரஞ்சன் மார்டி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர் நிரஞ்சன் மார்டி முன்னிலை வகித்தார். தேர்தல் பணியில் இருக்கும் சிரமங்கள், முந்தைய தேர்தல்களில் இருந்த சிரமங்கள் பற்றி, அதிகாரிகளிடம் நிரஞ்சன் மார்டி கேட்டறிந்தார்.ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை நாட்களில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து விவாதித்த தேர்தல் பார்வையாளர், பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.அலுவலர்கள் மத்தியில் பேசிய அவர், ''தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நன்னடத்தை விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். எந்த ஒரு வேட்பாளரும், நன்னடத்தை விதிகளை மீறாத வகையில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புகார்களுக்கு இடம் அளிக்காத வகையில், அதிகாரிகள் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும்,''என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, துணை கமிஷனர் ஹேமா, எஸ்.பி., உமா, மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி, டி.ஆர்.ஓ., கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித்தேர்தல்) ரங்கநாதன், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us