Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெயின்டிங் ஓவிய கண்காட்சி துவக்கம்

பெயின்டிங் ஓவிய கண்காட்சி துவக்கம்

பெயின்டிங் ஓவிய கண்காட்சி துவக்கம்

பெயின்டிங் ஓவிய கண்காட்சி துவக்கம்

ADDED : செப் 08, 2011 05:24 PM


Google News
Latest Tamil News

கோவை: கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் அறக்கட்டளை மையம், விவிட் பேலிட் நிறுவனம் சார்பில், பெயின்டிங் ஓவிய கண்காட்சி கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.

சித்ரகலா அகாடமி தலைவர் ஜீவானந்தம், கலைமகள் வித்யாலயா தாளாளர் மாதவன், திருச்சி என்.ஐ.டி.,துறை தலைவர் திருமாறன் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இது குறித்து கண்காட்சி நிறுவனர் மாணிக்கவாசகம் கூறுகையில்,'திருச்சி என்.ஐ.டி.,யில் பேராசிரியராக பணி புரிந்தாலும், ஓவியத்தில் எப்போது ஈடுபாடு அதிகம் உள்ளது. இந்த கண்காட்சியில் தலைவர்கள் உருவப்படமும், இயற்கை பற்றியும், அழகு வடிவமைப்புமுள்ள 30 படங்கள் 'அக்ரிலிக்-ஆயில்' மூலம் வரையப்பட்டும், முற்றிலும் கிராமத்தை பற்றியே வரையப்பட்ட 30 படங்கள் 'வாட்டர் கலர்' மூலமும் வரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ளன. கலை நயத்துக்கேற்ப ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us