Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்; பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்; பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்; பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்; பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

ADDED : ஆக 03, 2011 11:26 PM


Google News

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமீர்பாளையம்,புதுப்பாளையம், போக்குவரத்து நகர், புதுக்காலனி, ஆனந்தம் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது அயன் சத்திரப்பட்டி ஊராட்சி.

இங்கு வசிப்போர் தெருவிளக்கு, வாறுகால்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். முழுமையாக வாறுகால் கட்டப்படாததால், மழைக்காலத்தில் வீட்டின் முன் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குகிறது. வினியோகமாகும் குடிநீரும் உவர்ப்புடன் உள்ளது. கழிப்பிட வசதி இல்லாமல் திறந்த வெளியை நாடுகின்றனர்.ஆனந்தம்நகர்,புதுகாலனி பகுதியில் வாறுகால்கள் கட்டாமல் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது, இதன் பிரச்னையால் வாய்சண்டை, அடிதடி ஏற்படுகிறது. கொசுக்கடியும் உள்ளது. தெருவிளக்கு சுவிட்சை போட கூட ஆள்இல்லை.பொதுமக்களே போடுகின்றனர். இது தொடர்பாக சத்திரப்பட்டி ஊராட்சியினரின் குமுறல்கள் சில இதோ:ஏ.பொன்னுச்சாமி: இங்கு பிரதான நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது. ஊருக்குள் வரும் வண்டிகள் வேகமாக வருவதால்,இதன் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்க கேட்டோம். ரோடு தான் வந்ததே தவிர , வேகத்தடை அமைத்தபாடில்லை.எம்.கருப்பசாமி: நியுகாலனி, ரோஜா தெரு,ஆர்.இ.சி.டி.தெருவில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. இருள் சூழ்ந்து இரவில் நடமாட முடியவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது. நியு காலனியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இங்குள்ள இரண்டு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளும் பழுதடைந்து செயல்படமல் உள்ளது. பலமுறை எடுத்துக்கூறியும் ஊராட்சி தலைவர் கண்டு கொள்ளவில்லை.பி.மாரியம்மாள்: காலை, மாலை பள்ளி நேரத்தில் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால்,சிறுபிள்ளைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றன . முன்பு மூன்று இடங்களில் வேகத்தடை இருந்தது.சமீபத்தில் ரோடு போடும்போது வேகத்தடை போட வில்லை. ரோடு போடுபவர்களிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. கே.கோவிந்தம்மாள்: கழிப்பிட வசதியில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பலரும் திறந்த வெளியை பயன்படுத்து கின்றனர். உப்புத்தண்ணீர் மோட்டார் இருந்தும் செயல்படவில்லை. குப்பை தொட்டி இல்லாமல் தெருவில் குப்பைகளை வீசி எறிவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கே.உலகராஜா: நடுநிலைப்பள்ளியில் மாணவர் சுகாதாரவளாகம் முறையாக பராமரிக்காத நிலையில் கதவுகள் சேதமடைந்துள்ளன. ஊருக்கு நடுவில் உள்ள குளத்தில் வீசியெறிந்த குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்காததால், சுகாதார பணிகள் பாதிக்கிறது. அருந்ததியர் காலனி குடியிருப்புக்குள் மழை நீர் புகுகிறது.



நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us