Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 21, 2011 02:26 AM


Google News

திருநெல்வேலி : பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் பென்ஷன் வழங்கவேண்டும். விபத்து மரண நிவாரணம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும். இயற்கை மரணத்திற்கு ஒரு லட்சம் வழங்கவேண்டும். திருமணம், கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும். பணப்பயன்களுக்கு விண்ணப்பித்தவர்களுக் காலதாமதம் செய்யாமல் உடனே பணம் வழங்கவேண்டும். பதிவுப்படிவங்களில் வி.ஏ.ஓ., கையெழுத்து இடுவதை ரத்து செய்யவேண்டும். பணப்பயன்கள் கேட்டு விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை நகல் மட்டும் இணைத்தால் போதும் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.



நலவாரிய பதிவின் போது ஜாதி பெயர் கேட்பதை கைவிடவேண்டும். கார்டு புதுப்பிக்க காலதாமதம் ஆனாலும் விபத்து மரணநிதி இயற்கை மரணநிதி, ஓய்வு நிதிகளை வழங்கவேண்டும். இறந்துபோன தொழிலாளியின் அட்டை காணாமல் போனாலும் நகலை காட்டினால் அனைத்து நிவாரணமும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர் சங்கம் பழனிச்சாமி, பொதுத் தொழிலாளர் சங்கம் சுடலைராஜ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மனோகரன், நிர்வாகிகள் வேல்முருகன், ஆறுமுகம், ரவீந்திரன், செந்தில், தமிழ்செல்வன், நடராஜன், சண்முகம், வைகுண்டமணி, வன்னியபெருமாள், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us