ADDED : ஆக 18, 2011 12:45 AM
இளையான்குடி : இளையான்குடி அருகேயுள்ள இட்டிசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி,31.
இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியத்திற்கும் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவம் செய்வதில் முன் விரோதம் இருந்தது.
ஆக 13 ல் மாலை 5 மணியளவில் ஆரோக்கியத்தின் மனைவி அன்னாள், தனது குழந்தைகளுடன் தாயமங்கலத்தில் இருந்து இட்டிசேரிக்கு திரும்பும் வழியில் சாத்தமங்கலம் அருகே ஆரோக்கியசாமி , அவரது தந்தை சவரிமுத்து, சாத்தமங்கலத்தை சேர்ந்த உறவினர்கள் செபஸ்தி , பிரபு , டென்னிஸ் சேர்ந்து தாக்கியதாக இளையான்குடி போலீசில் அன்னாள் புகார் செய்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அன்னாளின் உறவினர்கள், இட்டிசேரி கிராம மக்கள் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


