/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., வேட்பாளர்கள் மனு நிராகரிப்புதி.மு.க., வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு
தி.மு.க., வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு
தி.மு.க., வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு
தி.மு.க., வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு
ADDED : அக் 02, 2011 09:07 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 11வது வார்டில், தி.மு.க., வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட அம்பிகா என்பவரும், அவரது கணவர் பால்ராஜூம் தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
வாபஸ் நாளில் ஏதாவது ஒரு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வது என முடிவு செய்து இருந்தனர்.
மனு பரிசீலனையின் போது கணவர் பால்ராஜ் மனுவுக்கு மனைவி அம்பிகாவும், அதே போல மனைவி அம்பிகா மனுவுக்கும் கணவர் பால் ராஜூம் முன்மொழிந்து இருந்தது தெரியவந்தது. 'வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தவர் இன்னொரு நபருக்கு முன்மொழியக் கூடாது' என்பதால் இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, அதே வார்டில் போட்டியிடும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பால்ராஜ், அம்பிகா ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி துவாரகநாத் தள்ளுபடி செய்தார். இதே வார்டில் பால்ராஜ், அவரது மனைவி அம்பிகா ஆகியோர் ஏற்கனவே கவுன்சிலர்களாக பதவி வகித்தவர்கள். இந்த வார்டில் அ.தி.மு.க., சார்பாக கிருஷ்ணமூர்த்தியும், பா.ஜ., சார்பில் செந்திலும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


