/உள்ளூர் செய்திகள்/சேலம்/அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அ.தி.மு.க., 50வது வார்டு வேட்பாளர் உறுதிஅடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அ.தி.மு.க., 50வது வார்டு வேட்பாளர் உறுதி
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அ.தி.மு.க., 50வது வார்டு வேட்பாளர் உறுதி
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அ.தி.மு.க., 50வது வார்டு வேட்பாளர் உறுதி
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அ.தி.மு.க., 50வது வார்டு வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 01:35 AM
சேலம்: ''அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநகராட்சி, 50வது வார்டு வேட்பாளர் நடேசன் தெரிவித்தார்.சேலம் மாநகராட்சி, 50 வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் நடேசன்(59) போட்டியிடுகிறார். கடந்த, 1972ம் ஆண்டு முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். 2008-11 சேலம் மாவட்ட ஜெ., பேரவை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.தேர்தல் வாக்குறுதி குறித்து அ.தி.மு.க., வேட்பாளர் நடேசன் கூறியதாவது:மாநகராட்சி, 50 வது வார்டின் அனைத்து பகுதிகளிலும், சாலை, சாக்கடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மணியனூர் ரோடு உடனடியாக அமைத்து தரப்படும். எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும்.காத்தாயம்மாள் நகரில், ரோடு வசதி, சாக்கடை வசதி, சண்முகா நகர் வீதியில் சாலை, சாக்கடை வசதி, வள்ளுவர் நகரில் சாக்கடை வசதி, அவ்வை நகரில் சாக்கடை வசதி, சாலை வசதி, காந்திநகர், பாஞ்சாலி நகர், பாரதிநகர், குமரன் தெரு, மணியனூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படும்.அம்பேத்கர் காலனியில், பழுதடைந்துள்ள சத்துணவு கூடம் சீர் செய்யப்படும். பொடரங்காடு, மணியனூர் ஹவுசிங் போர்டில் சமுதாயக்கூடம், பிரைமரி ஹெல்த் சென்டர் ஏற்படுத்தப்படும். சாஸ்தா நகரில், மண்ணெண்ணெய் பங்க் அமைக்கப்படும்.
அண்ணாநகர் மற்றும் பொடராங்காடு பகுதிகளில் ரேஷன் கடை அமைக்கப்படும். கே.பி., கரடு வடபுறம் சாக்கடை வசதி, கந்தப்பா காலனியில் சாக்கடை வசதி, கே.பி.கரடு தென்புறம் சாலை வசதி, கொடம்ப காடு பகுதியில் குடிநீர் வசதி செய்து கொடுககப்படும். எஸ்.கே., கார்டனில் அப்ரூவர் வசதி செய்து தரப்படும்.புத்தூர் இட்டேரி ரோட்டில், சாலை மற்றும், சாக்கடை வசதி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒரு நபரை அமைத்து, அவர் மூலம் அந்த பகுதியின் குறைகளை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மணியனூர் பகுதியை சுற்றி ஆறு கிராமங்கள் உள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர மினி பஸ் வசதி செய்து தரப்படும்.இவ்வாறு கூறினார்.


