ADDED : அக் 07, 2011 10:13 PM

உள்ளாட்சி தலைவர் பதவிக்கு பல லட்சம் பேர் போட்டியிடுவதால், அத்தனை பேருக்கும் கட்சித்தலைவர்கள் பிரசாரம் செய்ய முடியாது.
எனவே கட்சித்தலைவர்களின் பிரசார சி.டி.,க்கள் விற்கப்படுகிறது. இவற்றின்' விலை சற்று அதிகம். ம.தி.மு.க., பிரசார சி.டி., ஒன்றின் விலை 6,000 ரூபாய். 45 நிமிடம் ஓடக்கூடியது. அ.தி.மு.க., தி.மு.க., சி.டி.,க்களின் விலை அதை விட கொஞ்சம் அதிகம். இதனால் குட்டித்தலைவர்கள் விலையை பற்றி கவலைப்படாமல் சி.டி.,க்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் சி.டி., விற்பனையில் கட்சிகள் நன்றாக 'கல்லா' கட்டி வருகின்றன.


