கலெக்டர் அலுவலகத்தில் கழன்று விழுந்த தேசியக் கொடி
கலெக்டர் அலுவலகத்தில் கழன்று விழுந்த தேசியக் கொடி
கலெக்டர் அலுவலகத்தில் கழன்று விழுந்த தேசியக் கொடி
ADDED : செப் 01, 2011 12:09 AM

கடலூர் : கடலூர் கலெக்டர் அலுவலக மாடியில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி, நேற்று மதியம், திடீரென அவிழ்ந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இக்கட்டடத்தின் மொட்டை மாடியில், தினமும் காலை 6 மணிக்கு, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பறக்க விடுவது வழக்கம். மாலை 6 மணிக்கு தேசியக் கொடிக்குரிய மரியாதையுடன் இறக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். நேற்று காலை கலெக்டர் அலுவலக கட்டடத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, மதியம் திடீரென அவிழ்ந்து, கொடிக் கம்பத்திலேயே சிக்கிக் கிடந்தது. தகவலறிந்த பத்திரிகை நிருபர்கள் திரண்டு வந்தனர். உடனே, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தேசியக் கொடியை அவிழ்த்து சரி செய்து பறக்க விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


