கோர்ட்டுக்கு வர தனி வேன் :கல்மாடி கோரிக்கை
கோர்ட்டுக்கு வர தனி வேன் :கல்மாடி கோரிக்கை
கோர்ட்டுக்கு வர தனி வேன் :கல்மாடி கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2011 03:54 AM
புதுடில்லி: கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக தன்னை அழைத்து செல்ல தனி வேன் ஏற்பாடு செய்து தர வேண்டும் என சுரேஷ்கல்மாடி கோரிக்கை விடுத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்த குற்றத்திற்காக டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சுரேஷ்கல்மாடி. இவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யின் சிறப்பு கோர்ட் விசாரணை நடத்தும் தினங்களில் நேரில் ஆஜராக வரும் போது மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரவேண்டியுள்ளது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் தனி வேன் மூலம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.