ADDED : ஆக 22, 2011 12:45 AM

பாலக்காடு : செம்பை வித்யா பீடத்தின் 26வது ஆண்டு விழாவை, மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
செம்பை வைத்தியநாத பாகவதரின் 115வது பிறந்தநாள் விழா, செம்பை வித்யாபீடம் சார்பில், கடந்த இரு நாட்களாக அக்ரஹாரத்தில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செம்பை வித்யா பீடத்தின் 26வது ஆண்டு விழாவை, மாவட்ட கலெக்டர் மோகன்குமார், நேற்று துவக்கி வைத்து, ''செம்பை பாகவதரின் நினைவாக கட்டப்படும் மண்டபத்தின் வேலைகளை கண்காணித்து வருகிறோம்; பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, செம்பை சங்கீத உற்சவம், புதிய கட்டடத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்'' என்றார். கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர்வாக அதிகாரி விஜயன் வாரியர் தலைமை வகித்தார். மண்ணூர் ராஜகுமாரன் உன்னியின் இன்னிசைக் கச்சேரி நடந்தது. கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த 500 கலைஞர்கள் பங்கேற்றனர்.


