ADDED : ஆக 06, 2011 10:28 PM
பெரியகுளம்:பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், இலங்கை அரசுக்கு கண்டனம்
தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ., ஒன்றிய செயற்குழு கூட்டம்,
ஒன்றிய பார்வையாளர் சீனிவாசன் தலைமையில், பெரியகுளம் வடுகப்பட்டியில்
நடந்தது. ஒன்றிய பொதுசெயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர்
ராஜபாண்டி முன்னிலை வகித்தனர். மேல்மங்கலம் நெல்கொள்முதல் நிலையத்தில்,
கழிவுநெல் எனக்கூறி 42 கிலோவிற்கு 25 ரூபாய் பிடித்தம் செய்வதை கண்டித்து
விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்வது. தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும்,
இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராமேஸ்வரத்தில் ஆகஸ்ட் 7ல்
நடக்கும் கடல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது. வடுகபட்டியில் குடிநீர்
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பெரியகுளத்திலிருந்து குடிநீர் வழங்க
வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொது செயலாளர்கள்
வீராச்சாமி, குமார், வர்த்தக அணி தலைவர் கோபிக்கண்ணன் உட்பட பலர்
பங்கேற்றனர். கிளை தலைவர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.


