/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோழித்தீவன குடோனில் விபத்து இரண்டு தொழிலாளர் படுகாயம்கோழித்தீவன குடோனில் விபத்து இரண்டு தொழிலாளர் படுகாயம்
கோழித்தீவன குடோனில் விபத்து இரண்டு தொழிலாளர் படுகாயம்
கோழித்தீவன குடோனில் விபத்து இரண்டு தொழிலாளர் படுகாயம்
கோழித்தீவன குடோனில் விபத்து இரண்டு தொழிலாளர் படுகாயம்
ADDED : ஜூலை 24, 2011 01:07 AM
சேலம்: சேலம் அருகே, கோழித்தீவன குடோனில் கெமிக்கல் கேன் வெடித்து சிதறியதில், இருவர் படுகாயமடைந்தனர்.
சேலம், நரசோதிப்பட்டி சாஸ்திரி நகரில் சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் உள்ளது.
கோழிக்கான மருந்துகள், கெமிக்கல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று பணிக்கு வந்த சேலத்தைச் சேர்ந்த பூபதி(17), விருதுநகரைச் சேர்ந்த சரவணன்(37) இருவரும், கெமிக்கல் பவுடர் மிக்ஸிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிட்ரிக் ஆக்ஸைடு கெமிக்கல் கேன் வெடித்தது. அதிலிருந்து வெளியேறிய ஆஸிட்டுகள் பூபதி, சரவணன் மீது விழுந்ததில், அவர்களுடைய கை, கால் உடல் வெந்தது. மேலும், கெமிக்கல் வெளியேறியதால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், உடல் அரிப்பு பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கெமிக்கல் தாக்கத்தை கட்டுப்படுத்தினர். படுகாயமடைந்தவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.


