/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும்வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும்
வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும்
வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும்
வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும்
ADDED : அக் 13, 2011 12:06 AM
பொள்ளாச்சி:'கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றாமல் இருக்கும் அனைத்து
வளர்ச்சி பணிகளும் இம்முறை நிறைவேற்றப்படும்' என, ஜமீன்ஊத்துக்குளி
பேரூராட்சி தலைவர் பதவிக்கான பொது வேட்பாளர் லிங்கம்மாள் வாக்குறுதி
அளித்துள்ளார்.பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில், தலைவர்
பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் 'சிட்டிங்' 6வது வார்டு கவுன்சிலர்
தேவகியும், பொது வேட்பாளராக 'சிட்டிங்' தலைவர் லிங்கம்மாளும்
போட்டியிடுகின்றனர்.
பொது வேட்பாளர் லிங்கம்மாள் அளித்துள்ள வாக்குறுதிகள்:பேரூராட்சி 4வது
வார்டுக்குட்பட்ட தமிழ்மணி நகர், செ.மு.,நகர், சாய்ராம் நகர் பகுதிகளில்
சாலை, சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். செல்லமுத்து நகரில், முழு நேர
பொது நூலகம் கட்டி தரப்படும். 11வது வார்டு ராமநாதபுரம் காலனியிலும்,
நல்லூர், காந்திநகர் பகுதியிலும் முழுநேர ரேஷன்கடை அமைக்கப்படும்.
மதுரைவீரன் கோவில் பகுதியில், சமுதாய கூடம் அமைக்கப்படும். 5,6வது
வார்டுகளில் உப்பு தண்ணீர் வசதியும், 7வது வார்டில் கழிப்பிட வசதி, தண்ணீர்
வசதியும், 6வது வார்டில் சாலை வசதியும் செய்யப்படும்.குஞ்சிபாளையம்
மதுரைவீரன் கோவில் பகுதியில், சாலை அமைத்து கழிப்பிட வசதியும்,
நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியிலும் சாலை அமைத்து சாக்கடை வசதி செய்யப்படும்.
அனைத்து வார்டுகளிலும் குப்பை அள்ள தள்ளு வண்டி பயன்படுத்தப்படுகிறது. இதன்
எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மயான பகுதிக்கு தார்சாலை அமைத்து மயானம்
சுத்தம் செய்து சுற்றுச்சுவர் கட்டி தரப்படும். நஞ்சேகவுண்டன்புதூர்
பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படும்.கடந்த
ஐந்தாண்டுகளில், நிறைவேற்றப்படாமல் உள்ள வளர்ச்சி பணிகள் அனைத்தும் இம்முறை
நிறைவேற்றப்படும், என, வாக்குறுதி அளித்து வேட்பாளர் லிங்கம்மாள் பிரசாரம்
செய்து வருகிறார்.


