டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத கார் பாதுகாப்பு
டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத கார் பாதுகாப்பு
டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத கார் பாதுகாப்பு
ADDED : அக் 09, 2011 11:31 PM

நகரி : தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்காக போராடி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவுக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது பாதுகாப்பு குறித்து, உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, மாநில அரசு, அவரது பாதுகாப்பான பயணத்துக்கு, குண்டு துளைக்காத புதிய காரை ஒதுக்கியுள்ளது. இதுவரையில் குண்டு துளைக்காத டாடா சுமோ கார் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தனி தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த உளவுத்துறை அதிகாரிகள், தற்போது குண்டு துளைக்காத புதிய ஸ்கார்பியோ காரை வழங்கியுள்ளனர். அவர் வெளியே செல்லும்போது கண்டிப்பாக இந்த காரில் பயணம் செய்ய வேண்டுமென, உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை முதல், புதிய காரில் அவர் பயணம் செய்து வருகிறார். 'இசட்' பிரிவு பாதுகாப்பு உள்ள அவருக்கு, பாதுகாவலர்களாக, 10 பேரும், தனி பாதுகாப்பாளர்களாக, எட்டு பேரும், கார்டுகளாக, 10 பேரும் மாநில அரசு நியமனம் செய்துள்ளது.


