/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
தக்கலை : தக்கலை, வெட்டுவெந்நி, கொல்லங்கோடு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நடந்தது.
தக்கலை பெருமாள் கோயிலில் ஆசிரியர்கள் லீலாபாய், மோகனா, கீதா, ஈஸ்வரபிரசாத் ஆகியோரும், தக்கலை பார்த்தசாரதி கோயிலில் ஆசிரியர் ஈஸ்வரபிரசாத்தும் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இதுபோல் குமாரகோவிலில் கோயில் பூஜாரிகள் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் பெற்றோர்கள், கோயில் கமிட்டியினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். வெட்டுவெந்நி கோயில்
ஆண்டுதோறும் விஜயதசமி அன்று இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் எழுத்துக்கும் இருத்தும் 'அட்சர அப்யாஸம்' நிகழ்ச்சி நடந்தது. வெட்டுவெந்நி கண்டன் சாஸ்தா கோயிலில் வித்யா ராஜகோபால பூஜை நடந்தது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் சரஸ்வதி சன்னிதியில் எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயலாளர் புரு÷ஷாத்தமன் நாயர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதைப்போல் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் எழுத்துக்கு இருத்தும் அட்சர அப்யாஸம் நிகழ்ச்சி நடந்தது.


