/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு விபத்தில் காயமுற்று 5 நாளுக்கு பின் இரு பெண்கள் பலிபட்டாசு விபத்தில் காயமுற்று 5 நாளுக்கு பின் இரு பெண்கள் பலி
பட்டாசு விபத்தில் காயமுற்று 5 நாளுக்கு பின் இரு பெண்கள் பலி
பட்டாசு விபத்தில் காயமுற்று 5 நாளுக்கு பின் இரு பெண்கள் பலி
பட்டாசு விபத்தில் காயமுற்று 5 நாளுக்கு பின் இரு பெண்கள் பலி
ADDED : அக் 11, 2011 01:27 AM
சிவகாசி : சிவகாசி அருகே நடந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த பெண்
தொழிலாளர்கள் இருவர் ,ஐந்து நாட்களுக்கு பின் பலியாகினர். சிவகாசி அருகே
நமஸ்கரித்தான்பட்டியில், கிருஷ்ணா பைரோ எக்ஸ்போர்ட்ஸ் பட்டாசு ஆலையில்,
6ம்தேதி காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காளையார் குறிச்சியை
சேர்ந்த தங்கம்மாள்,55,சுப்பு,40, கூடம்மாள்,57, பாப்பா,35, ஆகிய நான்கு
பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தங்கம்மாள், சுப்பு ஆகியோர்
ஐந்து நாட்களுக்கு பின் நேற்று முன் தினம் இரவு இறந்தனர். அதிகாரி ஒருவர்
கூறுகையில்,'' இருவரை பலிகொண்ட விபத்தில், பேன்சிரக பட்டாசுகளில்
பயன்படுத்தப்படும் மணி மருந்து கலவை ஈரப்பதத்துடன் இருந்ததால் விபத்து
ஏற்பட்டது,'' என்றார்.


