ADDED : ஆக 03, 2011 10:45 PM
கோத்தகிரி : கோத்தகிரி கூக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கிராமக் கல்விக்குழு கூட்டம் நடந்தது.
கோத்தகிரி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பள்ளி மாணவ,மாணவியருக்கு சீருடை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மல்லம்மாள் வரவேற்றார். ஊர் தலைவர் ராஜூபெள்ளி தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் ஜோகராஜ் முன்னிலை வகித்தார்.இதில், பள்ளி பி.டி.ஏ., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.


