Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

ADDED : ஆக 27, 2011 11:54 PM


Google News

திருச்சி: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அண்மைக் காலமாக ரசாயன வர்ணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை கரைப்பதால், நீர் நிலைகள் மாசுபடுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். தமிழக மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். அதன் விபரம் வருமாறு: திருச்சி நகர் பகுதி சிலைகள் மேலசிந்தாமணியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியிலுள்ள காவிரி ஆறு, சோமரசம்பேட்டை சிலைகள் உய்யக்கொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூர் சிலைகள் பெருவள வாய்க்கால், ராம்ஜிநகர் சிலைகள் கட்டளை வாய்க்கால், லால்குடி சிலைகள் அய்யன் வாய்க்கால், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி சிலைகள் காவிரி ஆறு (வேங்கூர்), நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புதூர் ஆகிய பகுதி சிலைகள் காவிரி ஆறு, தாத்தையாங்கர்பேட்டை மற்றும் துறையூர் சிலைகள் முசிறி காவிரி ஆறு, உப்பிலியபுரம் சிலைகள் புளியஞ்சோலை வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு, மணப்பாறை சிலைகள் மாமுண்டி ஆறு, வையம்பட்டி சிலைகள் பொன்னனி ஆறு, துவரங்குறிச்சி பகுதி சிலைகள் பூதநாயகி அம்மன் கோவில் குளம் ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us