ADDED : ஆக 17, 2011 06:48 PM
லக்னோ : நாட்டில் ஊழல் பேயை விரட்ட போராடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, பகுஜன் சாமஜ் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக, கட்சி தலைவரும், உத்தரபிரதேச முதல்வருமாஜ மாயாவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உ.பி., மாநிலத்தில், எவ்வாறு ஊழலை அழிக்க பகுஜன் சமாஜ் கட்சி போராடுகிறதோ, அதேபோல, நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராடி வருகிறார். அவருக்கு, நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களது கட்சி, அன்னா ஹசாரேவிற்கு மட்டும் ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாது, அவருக்கு தோள் கொடுத்து உதவும் அனைத்து மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டுவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.


