/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்
கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்
கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்
கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்
ADDED : ஆக 28, 2011 01:05 AM
கோவில்பட்டி : பெற்றோர்களுக்கு பயந்து கோவில்பட்டி போலீசில் தஞ்சமடைந்த திருமணமான இளஞ்ஜோடிகளை பெற்றோர்களிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ராஜபாளையம் தாலுகாவை சேர்ந்த சம்சாபுரத்தை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் சக்திவேல்(23).
இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அய்யனார்புரத்தை சேர்ந்த குருநாதன் என்பவரின் மகள் பொற்கொடி(20). இவரும் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஈரோடு அருகில் உள்ள கொடு-முடி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் பெற்றோர்கள் வழியில் பிரச்னை வரும் என நினைத்து கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
டிஎஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபா மற்றும் மகேஷ்வரி ஆகியோர் சக்திவேல் மற்றும் பொற்கொடியின் பெற்றோர்களை அழைத்து பேசி திருமணமான இளஞ்ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.


