/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை திறப்பு"ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை திறப்பு
"ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை திறப்பு
"ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை திறப்பு
"ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை திறப்பு
ADDED : அக் 06, 2011 09:23 PM
திருப்பூர் : திருப்பூர் தாராபுரம் ரோட்டில் 'ஸ்மைல் ஒர்க்ஸ்' பல் மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது; தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமரன் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு 'ஸ்மைல் ஒர்க்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.
ஈறு வீக்கம் சிகிச்சை, செயற்கை பல் பொருத்துதல், கறை நீக்கம், பல் சீரமைப்பு, செயற்கை பல் பொருத்துதல், கிருமி நீக்கம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அதிநவீன கருவிகளை கொண்டு அளிக்கப்படும். பற்களின் தரம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு, டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம், பற்களின் தன்மை, பிரச்னை, குறைபாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.சிலருக்கு பற்கள் கோணல் மாணலாக முக அமைப்பையே கெடுத்து விடுகின்றன. 'ஜாஸ் அலைன்மென்ட்' அறுவை சிகிச்சை மூலம், பற்களை சீராக வடிவமைத்து, முத்துப்போன்ற பற்களுடன் முகப்பொலிவை மாற்ற முடியும். அனைத்து விதமான சிகிச்சைகளும் 'ஸ்மைல் ஒர்க்ஸ்' மருத்துவமனையில், விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் மேற்கொள்ளப்படும், என்றார்.அப்போது, பிரீத்தி, பரிமளாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.


