/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உச்ச வரம்புக்கு மேல் செலவு செய்தால் வென்றாலும் பதவி இழக்க நேரிடும் : அதிகாரி எச்சரிக்கைஉச்ச வரம்புக்கு மேல் செலவு செய்தால் வென்றாலும் பதவி இழக்க நேரிடும் : அதிகாரி எச்சரிக்கை
உச்ச வரம்புக்கு மேல் செலவு செய்தால் வென்றாலும் பதவி இழக்க நேரிடும் : அதிகாரி எச்சரிக்கை
உச்ச வரம்புக்கு மேல் செலவு செய்தால் வென்றாலும் பதவி இழக்க நேரிடும் : அதிகாரி எச்சரிக்கை
உச்ச வரம்புக்கு மேல் செலவு செய்தால் வென்றாலும் பதவி இழக்க நேரிடும் : அதிகாரி எச்சரிக்கை
ADDED : அக் 06, 2011 09:31 PM
அன்னூர் : 'ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, விதிகள் குறித்து அறிவுறுத்தும் கூட்டம் அன்னூர் தாசபளஞ்சிக மண்டபத்தில் நடந்தது. வட்டார தேர்தல் நடத்தும் அலுவலர் பூபதி பேசியதாவது: வாக்காளர்களுக்கு எந்த வழியிலும் மதுபானம், பொருள் அல்லது உணவு கொடுக்கக்கூடாது. யாருக்காவது ஓட்டளிக்கும்படியோ அல்லது ஓட்டளிக்கக்கூடாது என்றோ அச்சுறுத்தக்கூடாது. ஜாதி மற்றும் மதத்தை சொல்லி ஓட்டுக் கேட்கக்கூடாது. தேசிய சின்னங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். நோட்டீஸ், போஸ்டர், டோர் சிலிப்களில், அச்சகத்தின் பெயர், முகவரி இருக்க வேண்டும். ஓட்டுச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவுக்குள் சைகை உள்பட எந்த முறையிலும் பிரசாரம் செய்யக்கூடாது. பிரசார வாகனங்களுக்கு தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இரவு 10.00 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் ஒலிபெருக்கி, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு சமர்ப்பிக்க வேண்டும். பிரசாரத்தில் யாராவது இடையூறு செய்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும். வார்டு உறுப்பினர் 5,625 ரூபாயும், ஊராட்சி தலைவர் 22 ஆயிரத்து 500 , ஒன்றிய கவுன்சிலர் 56 ஆயிரத்து 250, மாவட்ட கவுன்சிலர் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயும் அதிகபட்சமாக செலவு செய்யலாம். உச்சவரம்புக்கு மேல் செலவு செய்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும், பதவியை இழக்க நேரிடும். இவ்வாறு, தேர்தல் அலுவலர் பூபதி பேசினார். உதவி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் விதிமுறைகள் குறித்து விளக்கினர்.


