ADDED : அக் 05, 2011 12:50 AM
செக்கானூரணி : செக்கானூரணி அருகே வடக்கம்பட்டியைச் சேர்ந்த தவசித்தேவர் மகன் சின்னன்,62.
இவர் இப்பகுதியில் உள்ள 'கிரஷர் மற்றும் தார் பிளான்ட்'ல் வாட்ச் மேன் ஆக உள்ளார். நேற்று முன்தினம் மாலை புதிய கூரை செட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார். செக்கானூரணி போலீசார் சின்னன் உடலை பிரேத பரிசோனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


