ADDED : செப் 09, 2011 01:43 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் வேளாண் அதிகாரிகள்
நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கடந்த மாதம் நடந்தது. அதில், உரக்கடைகளில் கலப்பட உரம், நிர்ணயித்த
விலைக்கு அதிகமாக உரம் விற்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினர்.
உரக்கடைகளில் திடீர் சோதனை நடத்த கலெக்டர் காமராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
அதையடுத்து, 14 வட்டாரங்களில் உள்ள வேளாண் அதிகாரிகள், தங்களுக்குரிய
வட்டாரங்களில் சோதனை நடத்தாமல் மற்ற வட்டாரங்களில் சோதனை நடத்த அனுப்பி
வைக்கப்பட்டனர். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சந்தேகம் உள்ள,
விவசாயிகளால் புகார் கூறப்பட்ட உரக்கடைகளில் திடீர் சோதனை நடந்தது. அதில்,
அதிக விலைக்கு உரம் விற்றது, கலப்பட உரம் விற்றது தொடர்பாக அதிகாரிகள் சில
ஆவணங்களை கைப்பற்றினர். சோதனை நடத்திய வேளாண் அதிகாரிகள் நேற்று இரவு
கலெக்டர் காமராஜை சந்தித்து அறிக்கை அளித்தனர்.


