/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பெண்ணை வழிமறித்து தாலிச்செயின் பறிப்புபெண்ணை வழிமறித்து தாலிச்செயின் பறிப்பு
பெண்ணை வழிமறித்து தாலிச்செயின் பறிப்பு
பெண்ணை வழிமறித்து தாலிச்செயின் பறிப்பு
பெண்ணை வழிமறித்து தாலிச்செயின் பறிப்பு
ADDED : செப் 09, 2011 01:51 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கடை வீதிக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணை
வழிமறித்து அவர் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துவிட்டு டூவீலரில்
தப்பிச்சென்ற வாலிபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை டவுன்
பிச்சத்தான்பட்டி ரவுண்டானா பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி
லீலா(27). இவர் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டுக்கு
தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் கடை வீதிக்கு வந்துள்ளார்.
பின்னர் வீடு திரும்பும்போது இவரை பின்தொடர்ந்து அடையாளம் தெரியாத
டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் அரசு மகளிர் கல்லூரி அருகில் வைத்து
லீலாவை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த ஆறு பவுன்
தாலிச் செயினை பறித்துவிட்டு இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து லீலா கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கணேஷ்நகர்
போலீஸார், தாலிச் செயினை பறித்துவிட்டு டூவீலரில் தப்பிச் சென்ற வாலிபர்களை
தேடிவருகின்றனர்.


