ADDED : செப் 15, 2011 03:47 AM
விழுப்புரம்:விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்
ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
சம்பத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
செயலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச
மடிகணினி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, பள்ளி
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் கணேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், முத்துகுமரன்,
தாசன், ரவி பங் @கற்றனர். துணை செய லர் விஜயன் நன்றி கூறினார்.


