உயர் போலீஸ் அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? : சி.பி.ஐ.,க்கு செஷன்ஸ் கோர்ட் கடும் கண்டனம்
உயர் போலீஸ் அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? : சி.பி.ஐ.,க்கு செஷன்ஸ் கோர்ட் கடும் கண்டனம்
உயர் போலீஸ் அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? : சி.பி.ஐ.,க்கு செஷன்ஸ் கோர்ட் கடும் கண்டனம்

கொச்சி : 'விசாரணை கைதி மர்மச் சாவு குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை கைது செய்யாமல் விட்டுவிட்டது ஏன்?' என்று, எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு, நீதிபதி கமால் பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 'இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கூடுதல் டி.ஜி.பி., முகமது யாசின் உட்பட போலீஸ் உயரதிகாரிகளை சி.பி.ஐ., கைது செய்யாதது ஏன்? அவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தும் அவற்றை செயல்படுத்தாமல் சி.பி.ஐ., திருப்பித் தந்தது ஏன்? உயரதிகாரிகள் பிறரை துன்புறுத்தி வருவது சரியல்ல. அவர்கள் இரட்டை வேடம் போடக்கூடாது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போனது ஏன்?' என, கடும் விமர்சனத்தை நீதிபதி வெளிப்படுத்தினார். மனுதாரருக்கு ஜாமின் வழங்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு சரியான பதிலை சி.பி.ஐ., அளிக்க முன்வராததால், நீதிபதி தனது கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.


