Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கணவர் வீட்டு முன் நள்ளிரவில் பெண் தர்ணா போராட்டம்

கணவர் வீட்டு முன் நள்ளிரவில் பெண் தர்ணா போராட்டம்

கணவர் வீட்டு முன் நள்ளிரவில் பெண் தர்ணா போராட்டம்

கணவர் வீட்டு முன் நள்ளிரவில் பெண் தர்ணா போராட்டம்

ADDED : அக் 08, 2011 09:56 PM


Google News
Latest Tamil News
கீழ்கட்டளை:கேட்ட வரதட்சணை கொடுக்காததால், தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து, தலைமறைவான கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, மாமனார் வீட்டு முன், இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.சோழிங்க நல்லூர், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபாதம். இவரது மகள் சரண்யா, 24. பட்டதாரி. கீழ்கட்டளை, ரங்காநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சித்தார்த்தன், 33. இன்ஜினியரிங் படித்த இவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அடையாறில் உள்ள 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' வகுப்பிற்கு சென்ற போது, சரண்யாவிற்கும் சித்தார்த்திற்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இரு வீட்டாரும் கலந்து பேசி, கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.பின், இருவரும் கீழ்கட்டளை, ராஜராஜேஸ்வரி அவென்யூவில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். திருமணத்தின்போது, சரண்யாவின் பெற்றோர் மகளுக்கு, 30 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொடுத்தனர்.

மூன்று மாதங்கள் சரண்யா மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். பின், சித்தார்த்தன் வீட்டார் சரண்யாவிடம், 'உனது பெற்றோர் வீட்டில் இருந்து, கார் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் வாங்கி வா' என, வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஜூலை மாதம் 26ம் தேதி, சரண்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு, சித்தார்த் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு, சரண்யாவை அவர் சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. கணவரை, தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, கீழ்கட்டளை மகளிர் காவல் நிலையத்தில் சரண்யா புகார் செய்துள்ளார். இந்நிலையில், ராமமூர்த்தி வீட்டின் முன், நேற்று முன் தினம் நள்ளிரவு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து, சரண்யா கூறுகையில், 'கேட்ட வரதட்சணை கொடுக்க வில்லை எனக் கூறி, என்னை திட்டமிட்டு வெளியேற்றி விட்டனர். வழக்கறிஞர் நோட்டீஸ் வேறு அனுப்பி வைத்துள்ளனர். எனக்கு, போக்கிடம் இல்லாததால், என் கணவர் வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். என் கணவருடன் சேர்ந்து வாழும் வரை, நான் போராட்டத்தை முடிக்கப்போவதில்லை. கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளன்' என்றார். சித்தார்த்தின் குடும்பத்தாரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவர்கள், பதிலளிக்க முன்வரவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us