Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜன்லோக்பால் நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் “ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

ஜன்லோக்பால் நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் “ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

ஜன்லோக்பால் நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் “ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

ஜன்லோக்பால் நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் “ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

UPDATED : அக் 04, 2011 01:50 PMADDED : அக் 04, 2011 10:56 AM


Google News
Latest Tamil News

ராலேகான் சித்தி: ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனது முக்கிய நோக்கம். வரும் குளிர்கால பார்லி., கூட்டத்தொடரில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் எனது உண்ணாவிரத போராட்டம் மீண்டும் தொடரும்.



ஜன்லோக்பால் மசோதாவுக்கு பா.ஜ., ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது. நாட்டில் அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைக்கிறது காங்கிரசை தவிர. இதனால் வரும் காலத்தில் மசோதா நிறைவேற்ற தவறும்பட்சத்தில் தேர்தல் நடவக்கவுள்ள மாநிலங்களில் காங்., பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்யக்கூடாது என கேட்டுக்கொள்வேன். இந்த நாட்டுக்காக யார் உழைக்க நினைக்கின்றனரோ அவர்களுக்கு ஓட்டளியுங்கள். நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா நிறைவேற்றபட வேண்டும்.



தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலம் மற்றும் உத்திரபிரதேசத்தில் பலகட்ட பிரசார பேரணி நடத்தவுள்ளேன். அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். உ.பி.,யில் தேர்தலுக்கு முன்னதாக 3நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றேன். இதற்கென தசரா திருவிழாவிற்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்யவிருக்கின்றேன். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் நிச்சயம் இருக்கும். பிரதமர் நேர்மையான மனிதர் ஆனால் இவர் ரிமோட் கன்ட்ரோலுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். இவ்வாறு ஹசாரே தெரிவித்தார்.





ஹசாரே கருத்துக்கு காங்., எதிர்ப்பு : ஹசாரேயின் கருத்துக்கு சட்ட அமைச்சர், மற்றும் காங்., தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சல்மான் குர்ஷீத் கூறுகையில்: மற்ற மசோதக்களை விட பலமான மசோதாவாக கொண்டு வரவே காங்., விரும்புகிறது. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது. மக்களுக்காக காங்கிரஸ் உழைத்து வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும், யாருடைய தாக்குதலை பற்றியும் கவலைப்பபடாது என்றாõர். ஆல்வி கூறுøயில் ஹசாரேயின் கருத்து கண்டனத்திற்குரியது என்றார். பா.ஜ. ஆர்.எஸ்.எஸ்., என தற்போது அந்த வரிசையில் ஹசாரே இடம் பிடித்திருக்கிறார். இது கட்சியை எந்த விதத்திலும் பாதிக்ககாது என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us