ADDED : அக் 04, 2011 01:54 PM
புதுடில்லி: தன் மீது போடப்பட்ட வழக்கை, பிரதமர் தலையிட்டு வாபஸ் பெறச்செய்ய வேண்டும் என ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மத துவேசத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் பேசிய சுவாமி, தன் மீதான வழக்கு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், 2ஜி வழக்கு காரணமாக தன் மீது உள்நோக்கத்துடன் இவ்வாறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


