/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தடையை மீறி தி.மு.க., ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் 765 பேர் கைதுதடையை மீறி தி.மு.க., ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் 765 பேர் கைது
தடையை மீறி தி.மு.க., ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் 765 பேர் கைது
தடையை மீறி தி.மு.க., ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் 765 பேர் கைது
தடையை மீறி தி.மு.க., ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் 765 பேர் கைது
ADDED : ஆக 01, 2011 11:57 PM
சிவகங்கை : அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, சிவகங்கையில் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உட்பட தி.மு.க.,வினர் 765 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரியும், தி.மு.க., நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தி.மு.க.,வினர் நேற்று மாநில அளவிலான போராட்டம் நடத்தினர். சிவகங்கையில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்திருந்தனர். தடையை மீறி: இந்நிலையில் சிவகங்கையில் நேற்று தடையை மீறி, காலை 10.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், அவைத்தலைவர் வைத்தியநாதன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் 756 பேர் கோர்ட் வாசல் முன் கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலக ஆர்ச் வரை சென்று, ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ்.பி., பன்னீர்செல்வம், கூடுதல் எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் இளங்கோ, பத்மாவதி, மங்களேஸ்வரன், பால்ராஜ் உட்பட போலீசார் அவர்களை கைது செய்து, பிற்பகல் 2 மணிக்கு விடுவித்தனர். எஸ்.பி., கூறுகையில்,''போலீஸ் சட்டம் 30(2)ன்படி சிவகங்கையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த, ஜூலை 27 முதல் ஆக.10 வரை தடை உள்ளது. தடையை மீறி வந்ததால், கைது செய்து பின் விடுவித்தோம்,'' என்றார்.


