Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ. 2 லட்சம் லஞ்சம்: வருமானவரி கமிஷனர் கைது

ரூ. 2 லட்சம் லஞ்சம்: வருமானவரி கமிஷனர் கைது

ரூ. 2 லட்சம் லஞ்சம்: வருமானவரி கமிஷனர் கைது

ரூ. 2 லட்சம் லஞ்சம்: வருமானவரி கமிஷனர் கைது

UPDATED : ஆக 30, 2011 06:20 AMADDED : ஆக 30, 2011 05:45 AM


Google News
மும்பை: தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக வரி விதிப்பு நிர்ணயம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவானவரித்துறை கமிஷனரை சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மும்பை பந்தாரா பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த 2008-2009-ம் ஆண்டிற்கான வருமானவரி ரிட்டனை தாக்கல் செய்யவில்லை என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. மும்பையின் பந்தரா பகுதியின் எல்லைக்குட்பட்ட வருமான வரித்துறை கமிஷனராக தயாஷங்கர் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த தனியார் நிறுவன நிர்வாகிகளை தொடர்பு கொண்ட தயாஷங்கர், அவர்களுக்கு சாதகமாக வருமான வரி விதிப்பு நிர்ணயம் செய்து உத்தரவிடுவதாகவும், அதற்கு கைமாறாக ரூ. 2 லட்சம் லஞ்சமாக ‌கேட்டுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மும்பையின் ‌மேற்கு மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனர் ரிஷிராஜ் தலைமையில் போலீசார் , தயாஷங்கரை கண்காணித்தனர், சம்பவத்தன்று தனியார் நிறுவன நிர்வாகியிடம் லஞ்சப்பணம் ரூ. 2லட்சத்தை வாங்கிய போது சி.பி.ஐ. போலீசார் கையும்களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அவருக்கு சொந்தமான மும்பை, லக்னோ, டில்லி, காஸியாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 8 லட்சம் சிக்கியதாக சி.பி.ஐ. இணை இயக்குனர் ரிஷிராஜ் தெரிவித்தார். தற்போது வருமான வரி கமிஷனர் தயாஷங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) சி.பி.ஐ. கோர்டில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us