/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வம்தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வம்
தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வம்
தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வம்
தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வம்
ADDED : செப் 06, 2011 01:45 AM
கோபிசெட்டிபாளையம்: தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்.
கோபியில், தே.மு.தி.க., வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கோபி ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட பொது செயலாளர் ராசு குமாரசாமி, மகளிர் அணி செயலாளர் ருக்குமணி உள்பட 10 பேர் மனு அளித்தனர். கோபி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பொன்னுசாமி, சந்திரன், கோதண்டபாணி, அம்மாசி உள்பட 40 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு நகர செயலாளர் சத்திவேல், நகர மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, கோடீஸ்வரன், சத்திவேல் ஆகியோரும், சத்தி நகராட்சி தலைவர் பதவிக்கு தரணி முருகன் உள்பட சிலரும், கூகலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுப்பிரமணி, லக்கம்பட்டி தலைவர் பதவிக்கு பிரபாகரன் உள்பட 20 மனு அளித்தனர். கோபி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 30 பேர் மனு அளித்தனர். நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக விருப்ப மனு அளித்தனர். மனுக்கள் வாங்கும் குழுவில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில விவசாய அணி செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் மனுக்கள் வாங்கினர்.


