/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டாஸ்மாக் கடைகளில் முன்னணி நிறுவன சரக்குகளுக்கு தட்டுப்பாடு:"குடி'மகன்கள் அதிருப்திடாஸ்மாக் கடைகளில் முன்னணி நிறுவன சரக்குகளுக்கு தட்டுப்பாடு:"குடி'மகன்கள் அதிருப்தி
டாஸ்மாக் கடைகளில் முன்னணி நிறுவன சரக்குகளுக்கு தட்டுப்பாடு:"குடி'மகன்கள் அதிருப்தி
டாஸ்மாக் கடைகளில் முன்னணி நிறுவன சரக்குகளுக்கு தட்டுப்பாடு:"குடி'மகன்கள் அதிருப்தி
டாஸ்மாக் கடைகளில் முன்னணி நிறுவன சரக்குகளுக்கு தட்டுப்பாடு:"குடி'மகன்கள் அதிருப்தி
ADDED : செப் 06, 2011 01:57 AM
நாமக்கல்: டாஸ்மாக் மதுபானக் கடைகளில், கடந்த இரு வாரங்களாக, முன்னணி
நிறுவனங்களின் சரக்குகளுக்கு பதிலாக, பல்வேறு புதிய ரக மதுபானம் விற்பனை
செய்யப்படுவதால், 'குடி'மகன்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நாமக்கல்
மாவட்டத்தில், 238 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அந்த மதுபானக் கடைகளில்
மெக்டவல், மேன்சன்ஹவுஸ், ஹனிபி, லாமார்டின், கொரியர் நெப்போலியன் உள்ளிட்ட
பல்வேறு மதுபான வகைகளும் கிங்பிஷர் ஸ்டிராங், வாரியன் 6000 உள்ளிட்ட பீர்
வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக, முன்னணி
நிறுவனங்களின் மதுபான வகைகள் எதுவும் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை
செய்யப்படுவதில்லை. நாமக்கல் நகரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில்
இந்த மதுபானங்கள் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, பல்வேறு புதுப்புது
மதுபானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதுகுறித்து கடை விற்பனையாளர்களிடம்
கேட்டால், 'குடோனில் இருந்து மெக்டவல் உள்ளிட்ட மதுபான வகைகள் மிகக்
குறைந்த அளவில் தரப்படுகின்றன. மற்ற மதுபான வகைகள் அதிகளவில் தரப்படுகிறது,
என்கின்றனர். ஆனால், கடைகளுக்கு வரும் மெக்டவல் உள்ளிட்ட மதுபான வகைகளை
கடை விற்பனையாளர்கள் மறைத்து வைத்து கூடுதல் விலையில் விற்பனை செய்வதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது: டாஸ்மாக்
மதுபானக் கடைகளில் எம்.சி., (மெக்டவல்) பிராந்தி மதுபானம் அதிகளவில்
விற்பனையாகும். அந்த மதுபானம் குறைந்த அளவிலேயே கடைகளுக்கு குடோன்களில்
இருந்து வழங்கப்படுகிறது. அதனால், அவை வந்தவுடன் விற்று தீர்ந்துவிடுகிறது.
மேலும், ஹனிபி உள்ளிட்ட ஒரு சில மதுபானங்கள் கடைகளுக்கு சப்ளை
செய்வதில்லை. மாநிலம் முழுவதும் மெக்டவல் உள்ளிட்ட மதுபானங்கள் குறைந்த
அளவிலேயே சப்ளை செய்யப்படுகிறது. மதுபானங்களை மறைத்து வைத்து கூடுதல்
விலையில் விற்பனை செய்வதில்லை, என்றனர். மெக்டவல், மேன்சன்ஹவுஸ் உள்ளிட்ட
மதுபான வகை தட்டுப்பாட்டால் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மதுபான வகைகளை
பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு 'குடி'மகன்கள் தள்ளப்பட்டுள்ளனர். புதிதாக
வந்துள்ள மதுபான வகையில் 'கிக்' இல்லை என்பது 'குடி'மகன்களின்
குற்றச்சாட்டு.


