/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேட்பாளர்களின் ஆதரவு கூட்டத்தினால் அமாவாசையில் மனு தாக்கல் உற்சாகம்வேட்பாளர்களின் ஆதரவு கூட்டத்தினால் அமாவாசையில் மனு தாக்கல் உற்சாகம்
வேட்பாளர்களின் ஆதரவு கூட்டத்தினால் அமாவாசையில் மனு தாக்கல் உற்சாகம்
வேட்பாளர்களின் ஆதரவு கூட்டத்தினால் அமாவாசையில் மனு தாக்கல் உற்சாகம்
வேட்பாளர்களின் ஆதரவு கூட்டத்தினால் அமாவாசையில் மனு தாக்கல் உற்சாகம்
ADDED : செப் 27, 2011 11:20 PM
கடலூர் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி கிராமப் புறங்களில் உள்ள வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்காக நேற்று தங்கள் ஆதரவாளர்களுடன் குவிந்ததால் கடலூர் மாவட்டம் முழுவதும் களைகட்டியது.உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தல் வரும் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், நகரமன்ற தலைவர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி சேர்மன், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 6,492 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
அதையொட்டி கடந்த 22ம் தேதி முதல் மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.ஒவ்வொரு பதவிக்கும் 2க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இதனால் 6,492 பதவிகளுக்கும் பல ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்காக நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் நகர மன்ற தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனு நகராட்சி அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் எதிர்கட்சி வேட்பாளர்களிடம் தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக கிராமத்தில் ஆதரவு திரட்டி ஒட்டு மொத்த கூட்டத்தையும் வாகனங்களில் ஏற்றி அழைத்து வருகின்றனர்.இதேப்போன்று ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் மனுக்கள் பெறும் அலுவலகங்களில் குவிந்து வருவதால் மாவட்டம் முழுவதும் மக்கள் கூட்டத்தினால் களை கட்டியது.நேற்று நாள் முழுவதும் நிறைந்த மகாளய அமாவாசை என்பதால் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் வெற்றி வாய்ப்பு கருதி மனு தாக்கல் செய்தனர்.கடலூரில் வேட்பாளர்கள் தங்களுடன் அழைத்து வந்த ஆதரவாளர்களுக்கு பிரியாணி, கைசெலவுக்கு பணம், உற்சாக பானம் என மறைவான இடத்தில் வேட்பாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது.குறிப்பாக அதிக வருவாய் தரும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு கிராமங்களில் கடும் போட்டி நிலவியது.இப்பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களும், 'சிட்டிங்' வேட்பாளர்களும் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணத்தை 'தண்ணீராக' செலவழித்து வருகின்றனர்.


