Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ராம்தேவ் அறக்கட்டளைக்கு போலீஸ் நோட்டீஸ்

ராம்தேவ் அறக்கட்டளைக்கு போலீஸ் நோட்டீஸ்

ராம்தேவ் அறக்கட்டளைக்கு போலீஸ் நோட்டீஸ்

ராம்தேவ் அறக்கட்டளைக்கு போலீஸ் நோட்டீஸ்

ADDED : செப் 05, 2011 10:59 AM


Google News
டேராடூன்: உத்தர்க்காண்ட் மாநிலம் ஹரிதுவார் நகரில் யோகா குரு ராம்தேவ் ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு வங்கதேச நாட்டினர் காணாமல் ‌போன விவகாரம் குறித்து , போலீசார் ராம்தேவிற்கு சொந்தமான அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு ராம்தேவ் , கறுப்பு பணத்தை ஒழி்‌க்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனேவ அன்னியச்செலவாணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் ‌நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இவரது ஆசிரமத்தில் கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள், மகன் ஆகிய நான்கு பேர், ராம்தேவ் ஆசிரமத்திற்கு வந்தனர். இவர்களில் கணவனும், மகளும் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி வங்கதேசம் திரும்பிவிட்டனர். மனைவி, தனது 17 வயது மன நலம் பாதித்த மகனுடன் ராம்தேவ் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர் இவர்கள் திடீரென காணாமல் போனதாக புகார் எழுந்தது. இது குறித்து ஏன் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற சந்தேகத்தின் பேரில் ஹரிதுவார் நகர போலீஸ் சூப்பிரண்டு கெய்வால் குராணா, வழக்குப்பதிந்து , ராம்தேவ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us