ADDED : ஆக 21, 2011 01:48 AM
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேங்கும் மழை நீரினால் பரவும் தொற்று நோய்கள் குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார மருத்துவர் அருண் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரிலிருந்து உருவாகும் கொசுக்களினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, பேரணியில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பிச் சென்றனர். கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாக பேரணியாக சென்று, பழைய பானை, உரல், பழைய டயர் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை பொதுமக்களிடம் காண்பித்து கீழே ஊற்றினர்.இந்த தண்ணீரிலிருந்து உருவாகும் கொசுக்களினால் மலேரியா, டெங்கு காய்ச்சல், யானைக்கால் நோய், சிக்குன் குனியா ஆகிய நோய்களை உருவாக்கும் எனக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


