Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் சிறப்பு கருத்தரங்கம் கேரள முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கம் கேரள முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கம் கேரள முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கம் கேரள முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ADDED : ஜூலை 28, 2011 01:53 AM


Google News

திருநெல்வேலி : இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் இந்தியாவின் எதிர்காலமும்-இடதுசாரிகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது.இந்திய சமூக விஞ்ஞான கழக செயலாளர் பேராசிரியர் பொன்ராஜ் தலைமை வகித்தார்.

இணைச் செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம் வரவேற்றார். விழாவில் கேரள மாநில முன்னாள் அமைச்சர் பேபி பேசியதாவது:உலகமயமாக்கல், தனியார்மயம், தாரளமயம் கொள்கையின் காரணமாக உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. பணிபாதுகாப்பு குறைந்துள்ளது. சர்வேத தொழிலாளர் நல ஆணையம் சார்பில் ஜெனிவாவில் 183 நாடுகளின் புள்ளிவிபரம் அடிப்படையில் ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் உலகமயமாக்கல், தனியார் மயம் ஆக்கப்படுவதால் வேலைவாய்பின்மை பெருகியுள்ளது.உணவு தானியங்களை பொறுத்தவரையில் மன்மோன்கன்சிங், வாஜ்பாய் ஆட்சியில் கிட்டங்கியில் சேமித்து வைக்கப்படுகின்றன.



ஆனால் ஏழைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். தரமான கல்வியும் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வி பெறமுடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுசுகாதாரத்திலும் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பின்னடைவின் காரணமாக இடதுசாரிகளின் பலம் குறைந்துவிட்டதாக மதிப்பிட முடியாது.இவ்வாறு கேரள முன்னாள் அமைச்சர் பேபி பேசினார்.இதில் இந்திய சமூக விஞ்ஞான கழக தலைவர் சிவசங்கரன், செயலாளர் பேராசிரியர் பொன்ராஜ், பொருளாளர் ராஜகோபால், மொழிபெயர்பாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us