/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இலவச பொருட்கள் ஒப்புகை சீட்டில் பார்கோடு ஸ்டிக்கர்இலவச பொருட்கள் ஒப்புகை சீட்டில் பார்கோடு ஸ்டிக்கர்
இலவச பொருட்கள் ஒப்புகை சீட்டில் பார்கோடு ஸ்டிக்கர்
இலவச பொருட்கள் ஒப்புகை சீட்டில் பார்கோடு ஸ்டிக்கர்
இலவச பொருட்கள் ஒப்புகை சீட்டில் பார்கோடு ஸ்டிக்கர்
ADDED : செப் 08, 2011 10:30 PM
ராமநாதபுரம் : இலவச பொருட்கள் வாங்கியவுடன், கையெழுத்து வாங்கும் ஒப்புகை சீட்டில், பார்கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது.
தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி செப்.,15 முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கார்டுகளில், பெண் பயனாளிகளின் பெயர்கள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் தரமானதாக கொடுக்க அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. ம.பி., இமாச்சல், பீகார், பெங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து வாங்கப்படும் மின்விசிறியின் இறக்கைகள் உடையாத கண்ணாடி போன்ற பாலி கார்பன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய பாகங்கள் பிளாஸ்டிக் கார்பன், பிளாஸ்டிக், பாலிஅசிடால், நைலான் கொண்டு அமைக்கப்படுகிறது. இவற்றை சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் பிளாஸ்டிக் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனத்தினர் பரிசோதனை செய்த பிறகே மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டங்களில் 2500 பொருட்களுக்கு 32 பொருட்கள் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மொத்தம் மூன்று பார்கோடிங் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. வாங்கப்படும் பொருளில் ஒரு ஸ்டிக்கர், வாரண்டி கார்டில் ஸ்டிக்கர், ஒப்புகை சீட்டில் ஸ்டிக்கர் பயன்படுத்தப்படுகிறது.


