"குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் மட்டும் போதாது'
"குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் மட்டும் போதாது'
"குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் மட்டும் போதாது'

புதுடில்லி:''அபராதம் விதிப்பதால் மட்டுமே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது'' என்று டில்லி கோர்ட் கூறியுள்ளது.
டில்லியின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் ராகேஷ் சர்மா என்பவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, போலீசாரால் கைது செய்யப்பட்டு, கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராகேஷ் சர்மாவுக்கு, 3 நாட்கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து, டில்லி கோர்ட்டில், ராகேஷ் சர்மா மேல்முறையீடு செய்தார்.
தனது மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு, அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த, கூடுதல் அமர்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்திரா, ''சமூகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை, அபராதம் விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்தி விடமுடியாது. அதன் மூலம் குற்றவாளிகளை திருத்தவும் முடியாது. கீழ் கோர்ட் விதித்த தீர்ப்பில் தலையிட முடியாது'' என்றார்.ராகேஷ் சர்மாவின் மனுவை மீண்டும் கீழ் கோர்ட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


