ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
ADDED : ஜூலை 27, 2011 02:45 AM
ஐதராபாத்: ஆந்திராவில் கடப்பா லோக்சபா எம்.பி.யும்.
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டியின் சொத்து விவரங்கள் குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு 13 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, 23 நிறுவனங்களில் ஜெகன்மோகன்ரெட்டி பெருமளவு முதலீடு செய்திருப்பதற்கான ஆதராங்களை திரட்டியுள்ளது. மேலும் பல்வேறு அரசுத்துறைகளிலிருந்தும் தகவல்களை சி.பி.ஐ. பெற்றுள்ளது. முதற்கட்டமான தனது அறிக்கையினை மூடி முத்திரையிடப்பட்ட கவர்களில் , ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின் மீதான மறு விசாரணை எப்போது என்பது குறித்து ஐகோர்ட் தேதி வெளியிடவில்லை.