/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சாலை விபத்துகளை தடுக்க மனித சங்கிலி போராட்டம்சாலை விபத்துகளை தடுக்க மனித சங்கிலி போராட்டம்
சாலை விபத்துகளை தடுக்க மனித சங்கிலி போராட்டம்
சாலை விபத்துகளை தடுக்க மனித சங்கிலி போராட்டம்
சாலை விபத்துகளை தடுக்க மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2011 12:33 AM
தஞ்சாவூர்: தஞ்சையில் சாலை விபத்துகளை தடுக்கக்கோரி மனித சங்கிலி பேராட்டம் நடந்தது.
சாலை விபத்துக்களில் உலகத்தில் இந்தியா முதலிடத்திலும், குறிப்பாக இந்தியாவில் தமிழகம் சாலை விபத்துகளில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2009 ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 896 பேர் பலியாகியுள்னர்.
இனி வரும் காலங்களில் விபத்தை தடுக்க, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது, கட்டாயம் ஹெல்மெட் அணிவது, வேகத்தை கட்டுப்டுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி பேராட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலையில், நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, பா.ம.க., மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆலயமணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜசேகர், தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் ரவிந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.