/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர் பழைய படிவங்கள் அழிப்புஉள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர் பழைய படிவங்கள் அழிப்பு
உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர் பழைய படிவங்கள் அழிப்பு
உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர் பழைய படிவங்கள் அழிப்பு
உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர் பழைய படிவங்கள் அழிப்பு
ADDED : ஜூலை 27, 2011 01:28 AM
திண்டுக்கல்: சென்ற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட படிவங்கள், பயன்படுத்தப்படாத ஓட்டுச்சீட்டுக்களை அழிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சிகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடக்கின்றன. ஊராட்சி வார்டுகளில், பல உறுப்பினர் முறைக்கு பதில், ஒரு உறுப்பினர் முறை அமலுக்கு வருகிறது; ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒதுக்கீடு முறையிலும் சிறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த முறை ஊராட்சி தேர்தலுக்காக வழங்கப்பட்டு, இருப்பில் உள்ள ஓட்டுச்சீட்டு; படிவங்கள், கையேடுகள் தகுதியற்றவை என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் தேர்தலுக்காக, படிவம், கையேடுகளை புதிதாக அச்சிட்டு வழங்கவுள்ளது. பழைய படிவங்கள் மற்றும் ஓட்டுச்சீட்டுகளில், 10 நகல்களை மட்டும் இருப்பில் வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை, இயந்திரம் மூலம் சிறு துண்டுகளாக கிழித்து, அரசுக்கு இழப்பு ஏற்படாமல் ஏலம் விடவும், ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.